Translate

ஐயா/அம்மா ! இலவச ஆலோசனை,இலவச ஜோதிட ஆலோசனை

 அண்ணே வணக்கம்ணே ! இலவச ஆலோசனை வேண்டுவோர் கடிதம் மூலம் மட்டுமே தொடர்பு கொள்ளவேண்டும்.
------------------x---------------------------x--------------------------x----------------------
ஐயா/அம்மா !
இலவச ஆலோசனை வேண்டுவோர் கடிதம் மூலம் மட்டுமே தொடர்பு கொள்ளவேண்டும்.

போகிற போக்கில் ஒரு மெயிலை அனுப்பிவிட்டு அதை மறந்துவிடுபவர்களுக்காக
நான் என் நேரத்தை செலவழிக்க தயாரில்லை.

கடிதம் எழுத வேண்டிய முகவரி:

சித்தூர் .எஸ்.முருகேசன்,
17-201,கும்மரா தெரு,
சித்தூர் ஆ.பி
517001

பதில் அனுப்பவேண்டிய மெயில் முகவரியை கடிதத்தில் குறிப்பிடவும்.பதில்
மட்டும் மெயிலுக்கே அனுப்பப்படும்.

 தங்களுக்கு மெயில் மூலம் பதிலளிக்காமைக்கு மன்னிக்கவும்

-தங்கள் உண்மையுள்ள,
சித்தூர்.எஸ்.முருகேசன்
http://kavithai07.blogspot.in/p/blog-page_13.html

இலவச ஜோதிட ஆலோசனை
நவகிரக சொற்பொழிவு: 2

Posted on January 22, 2013   

அண்ணே வணக்கம்ணே !
இலவச ஜோதிட ஆலோசனைன்னு அறிவிச்சாலும் அறிவிச்சம் சனம் ஸ்டாண்டிங் அண்ட் ப்ளேயிங். ஏதாச்சும் வெப் சைட்ல ஒரு ஜாதகம் போட்டு அதை அட்டாச் பண்ணிட்டு கேள்வி கேளுங்கன்னு சொல்லியிருந்தம்.

சிலர் வெறும் பர்த் டீட்டெய்ல்ஸ் கொடுத்துர்ராய்ங்க. இல்லின்னா போட்ட ஜாதகத்தை அப்படியே காப்பி பேஸ்ட் பண்ணிர்ராய்ங்க.இல்லின்னா குறைஞ்சது அரைமணி நேரம் செலவழிச்சு வோர்ட்ல டைப் பண்ணி அனுப்பறாய்ங்க.வோர்ட்ல ஆயிரத்தெட்டு வெர்சன் இருக்கு. அது ஓப்பன் ஆகிறதில்லை. சிலர் அய்யர் மாருங்க வாக்கிய பஞ்சாங்கப்படி கையால எழுதின ஜாதகத்தை அனுப்பிர்ராய்ங்க.

நாம உபயோகிக்கிறது திருக்கணிதம். மேலும் அந்த ஜாதகத்துல பர்த் டீட்டெய்ல்ஸ் பலான சகாப்தம், பலான தமிழ் மாசம், பலான தமிழ் மாச தேதின்னு இருக்கும். இதுவும் பரவால்லை.தாளி பிறந்த நேரத்தை நாழிகை வினாழிகைன்னு கதை பண்ணியிருப்பாரு அய்யரு. அதை மணி நிமிசத்துக்கு மாத்தறதுக்குள்ள கிளிஞ்சுரும்.

இப்படி எத்தனையோ லொள்ளு. அதையெல்லாம் மீறித்தான் இலவச ஜோ.ஆலோசனை தந்துக்கிட்டிருக்கம்.

கடந்த காலத்துல முழுப்பலனுக்கு ரூ.250 வாங்கிக்கிட்டிருந்தம். ஜாதக வரத்தை குறைக்க அதை ரூ.500 ஆக்கிட்டம். நம்ம ஜாதகத்துல வீக்கா இருக்கிற ப்ளேனட்டே புதன் தான். ஆனால் நம்ம புத காரக தொழில் மற்றும் இன்கம் தான் தேடி வருது. ப்ளாக் எழுதறது, பத்திரிக்கை நடத்தறது,புஸ்தவம் போடறது எல்லாமே புத காரகம் தான்.

என்னடா இது ஓவரா போயிட்டிருக்கம்னு நினைச்சிட்டே இருந்தன். ஸ்கின் ப்ராப்ளம் வந்து ஆப்படிச்சுருச்சு. (இதுக்கும் புதன் தான் காரகம்) . டாக்டர் கொடுத்த மாத்திரையை ஒரு ரெண்டு நாள் நிப்பாட்டினாலும் நிலைமை ரெம்ப மோசமாயிருது.ஏறக்குறைய ஆல்க்கஹாலிக் கணக்கா அவதி. இதனால்தேன் கு.ப நாம பார்க்கிற ஜாதகங்களோட எண்ணிக்கைய குறைச்சுக்கலாம்னு தேன் ஃபீஸை அதிகரிச்சம்.

மறுபடி கில்ட்டி வந்துருச்சு. அதனால ரூ.250 டாரிஃபை அப்படியே விட்டுட்டு அதுக்கு பத்து கேள்விகளுக்கான பதில்களை மட்டும் தர்ரதா தீர்மானம் செய்தேன். அப்படியும் கில்ட்டி குறையலை.

கடந்த காலத்துல இலவச ஜோதிட ஆலோசனையில ஒரு ஜாதகத்துக்கு ஒரே கேள்விக்கு மட்டும் பதில் தந்துக்கிட்டிருந்தம். அதை மாத்தி தினசரி ஒரு ஜாதகத்துக்கு 10 கேள்விகள் இலவசம்னு அறிவிச்சுட்டம். நிபந்தனை: பர்த் டீட்டெய்ல்ஸ் – கேள்விகள் – மற்றும் பதில் அனுப்பவேண்டிய மெயில் ஐடிய குறிப்பிட்டு போஸ்டு கார்ட் எழுதனும்.ஆனால் இதையும் சனம் மதிக்கிறதில்லை.

எச்சரிக்கை:
இனி இலவச ஜோதிட ஆலோசனைக்கு தபால் மூலம் வராத ஜாதகங்களை பார்க்கிறதா இல்லை.


This entry was posted in இலவச ஜோதிட ஆலோசனை, ஜோதிடம், பெண் and tagged இலவச ஜோதிட ஆலோசனை.
https://anubavajothida.wordpress.com/tag/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88/